தடை செய்த இரட்டைமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்: காங். தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வலியுறுத்தல்

தடை செய்த இரட்டைமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்: காங். தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வலியுறுத்தல்
Updated on
1 min read

தடை செய்யப்பட்ட வலைகளை மீனவர்கள் பயன்படுத்துவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட் டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வலியுறுத்தி உள்ளார்.

மதுரை நகர் மாவட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற் றுக்கிழமை மதுரையில் நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட பி.எஸ்.ஞானதேசிகன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் விதிப்படி மாவட்ட, வட்டார நிர்வாகிகள் 5 ஆண்டுகள்தான் பதவியில் இருக்கலாம். மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிக்கப்படலாம். ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேல் யாரும் தொடர்ந்து இருக்கக் கூடாது. அந்த அடிப்படையில் தற்போது கட்சிக்காக உழைத்த புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளோம். இதில் கோஷ்டி பேதம் எல்லாம் பார்க்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி

மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மக்களவை வரலாற்றில் குறைந்த அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதில்லை என்றபோதி லும், தற்போது அதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. காரணம், மக்களவை உறுப்பினர்கள், மத்திய கணக்காயர் (சி.ஏ.ஜி.), காவல்துறை சீரமைப்புக் குழு உறுப்பினர்கள் போன்றவர்களைத் தேர்வு செய்ய எதிர்க்கட்சித் தலை வர் தேவை.

தனித்துப் போட்டி

பாஜக ஆட்சிக்கு வந்த 60 நாட் களில் நாடு முழுக்க சிறுபான்மை யினருக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நடக்க ஆரம்பித் துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத்துக்கான இடைத்தேர் தலில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. அதில் இரண்டு இடங்கள் பாஜக வசமிருந்தவை. வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என் பதற்கான முன்னோட்டம் இது. வரும் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

தமிழக மீனவர்கள் பிரச்சினை யில் நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை அரசு பறிமுதல் செய்த படகுகளை எல்லாம் உடனுக்குடன் மீட்டுக் கொடுத்தோம். ஆனால், இவர்கள் இதுவரையில் படகு கள் எதையும் மீட்கவில்லை. இந்தப் பிரச்சினை தீர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப் பட்ட இரட்டைமடி உள்ளிட்ட வலை களைப் பயன்படுத்துவதும், மிக அதிக சக்திகொண்ட மோட்டார் களைப் பயன்படுத்துவதும் மீனவர் பிரச்சினைக்கு காரணமாக உள்ளன. எனவே, தமிழக மீனவர் கள் தடை செய்யப்பட்ட வலை களையும், இயந்திரங்களையும் பயன்படுத்துவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in