

சென்னை: சென்னை அடையாறில் புதிதாக அமைய இருக்கும் பூங்காவுக்கு ‘கருணாநிதி பூங்கா’ என்று பெயர் வைக்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (மே 30) நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு நடக்கும் முதல் மாமன்ற கூட்டம் இதுவாகும். எனவே, மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு, மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் மொத்தம் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கிய தீர்மானங்களின் விவரம்: