

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று கப்பல் ஒன்று வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இந்தியா, ஆசிய நாடுகளுடன் டேட்டா பரிமாற்றத்துக்காக மும்பையில் இருந்துசிங்கப்பூர் வரை கடல் வழியாக கேபிள்களை பதிக்கும் பணி நடைபெற்று வருவது தெரியவந்தது.
என்டிடி எனப்படும் நிறுவனம் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மும்பையில் இருந்து கடல் வழியாக கொண்டுவரப்பட்ட கேபிளை நிலத்தின் வழியாக என்டிடி அலுவலகத்தில்இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டமாக, ராட்சத தொழில்நுட்ப இயந்திரங்களைக் கொண்டு கடலுக்கடியில் மொத்தம் 8,100 கி.மீ. தொலைக்கு கேபிள்பதிப்பு நடைபெறும் எனவும் மும்பைமற்றும் சென்னையில் இருந்து மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபைபர் கேபிள் மூலமாகஅதிவேக டேட்டா சேவை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.