

சென்னை: சென்னை விமான நிலைய இயக்குநராக சி.வி.தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையஇயக்குநராக இருந்த சரத்குமார்கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் டெல்லியில் உள்ள தலைமைஇடத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், சென்னை விமான நிலைய இயக்குநராக சி.வி.தீபக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே தீபக் டெல்லி தலைமையகத்தில் வரிவிதிப்பு பிரிவில் பொது மேலாளராக (நிதி மற்றும் கணக்கு) பணியாற்றி வந்தார். சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படித்த இவர், டெல்லியில் எம்பிஏ படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.