Published : 30 May 2023 06:27 AM
Last Updated : 30 May 2023 06:27 AM
மதுரை: மதுரை அருகே கண்மாயில் மூழ்கியபோது கூக்குரல் எழுப்பிய 3 சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் திருமண நாளில் தனது உயிரை பலி கொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், ராஜாக்கூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றியவர் முத்துக் குமார்(35). இவருக்கு மனைவி செல்லத்தாய், இரு குழந்தைகள் உள்ளனர். பள்ளி விடு முறையையொட்டி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலுள்ள பெற்றோர் வீட்டுக்குச் செல்லத் தாய், குழந்தைகளுடன் சென்றிருந்தார். நேற்று தனக்கு திருமண நாள் என்பதால் மனைவி, குழந் தைகளைப் பார்க்க முடிவு செய்த முத்துக்குமார், ராஜாக்கூரில் இருந்து மாட்டுத்தாவணி செல்ல பைக்கில் புறப்பட்டார்.
கருப்பாயூரணி அருகே சென்றபோது அங்குள்ள கண்மாயில் குளித்த 3 சிறுவர்கள், ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில், `காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என கூக்குரல் எழுப்பினர்.
இதைக்கேட்ட முத்துக்குமார், பைக்கை சாலையோரம் நிறுத்தி விட்டு கண்மாயில் இறங்கி 3 சிறுவர்களையும் காப்பாற்றினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கண்மாய் சேற் றில் சிக்கி முத்துக்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கருப்பாயூரணி போலீஸார், தீயணைப்பு வீரர்கள் முத்துக்குமாரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 3 சிறுவர்களைக் காப்பாற்றிய முத்துக்குமார் தனது உயிரை பறி கொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT