தருமபுரி: நெருக்கமாக இருந்த படங்களை வெளியிடுவதாக காதலியை மிரட்டிய காதலன் கைது

தருமபுரி: நெருக்கமாக இருந்த படங்களை வெளியிடுவதாக காதலியை மிரட்டிய காதலன் கைது
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணா புரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் சுஜாதா (21). (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் 2011-2013ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் டெக்ஸ்டைல் டிப்ளமோ கோர்ஸ் படித்து வந்தார்.

அவருடன் பயின்ற மதுரையைச் சேர்ந்த தீபக் அருண்மொழி (22) என்ற மாணவருடன் சுஜாதாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் இருவரும் நெருக்கமாக இருந்ததால் சுஜாதா கர்ப்பம் அடைந்துள்ளார். திறமையாக பேசி கருவை கலைக்க வைத்த தீபக் அருண்மொழி பின்னர் சுஜாதாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதை சுஜாதா கண்டித்து பேசிய போது, இருவரும் நெருக்கமாக இருந்த படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதுடன், வாட்ஸ் அப் மூலம் அவருக்கு சில படங்களையும் அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ந்த சுஜாதா கடந்த ஞாயிறன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தார் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

தற்கொலை முயற்சிக்கான காரணத்தை விசாரணையின்போது தெரிந்து கொண்ட கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் தீபக்கை தேடி வந்தனர். மதுரை பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த வேளாண் துறை அதிகாரி இளங் கோவன் மகன் தான் இந்த தீபக் அருண் மொழி என்பதும், அவர் தற்போது திருப்பூரில் பணியாற்றி வருகிறார் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. எனவே நேற்று திருப்பூரில் இருந்த தீபக்கை கிருஷ்ணாபுரம் இன்ஸ்பெக்டர் (பொ) காந்தி தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர். தீபக் அருண்மொழி மீது பலாத்காரம் செய்தது, தற்கொலைக்கு தூண்டியது, அந்தரங்க படங்களை வெளிட்டு மிரட்டியது ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in