உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒருவேளை இலவச மதிய உணவு

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒருவேளை இலவச மதிய உணவு
Updated on
1 min read

சென்னை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்கு ஒருவேளை இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மே 28-ம் தேதிதமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு ஒருவேளை மதிய உணவு வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டது.

இது தொடர்பான அறிவிப்பை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கடந்த 25-ம்தேதி வெளியிட்டிருந்தார்.

‘தளபதி விஜய் ஒருநாள்மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் பசியால் வாடும்மக்களுக்கு இயன்ற வரை உணவளித்து பசியைப்போக்கும் விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட போவதாக விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்திருந்தது.

234 தொகுதிகளில்.. அந்த வகையில், உலக பட்டினி தினமான நேற்று தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள்இயக்க நிர்வாகிகள் ஏழை மக்களுக்கு ஒருவேளை மதிய உணவை வழங்கினர்.

சென்னையில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஒருவேளை மதிய உணவை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர். விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கோவையில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மதிய உணவை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in