Published : 23 Oct 2017 10:33 AM
Last Updated : 23 Oct 2017 10:33 AM

இரும்புலிச்சேரியில் மேம்பாலம் அமைப்பது எப்போது?- பாலாற்று வெள்ளத்தால் போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்படும் அபாயம்

சேதமடைந்த இரும்புலிச்சேரி தரைப்பாலத்தை அகற்றி, புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக் கும் பணிகள் தொடங்கப்படாததால், பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டால் 3 கிராமங்கள் துடிக்கப்படும் நிலை உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி, எடையாத்தூர் மற்றும் சின்ன எடையாத்தூர் ஆகிய கிராமங்கள் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களின் அடிப்படை தேவை களுக்காக பாலாற்றில் உள்ள தரைப்பாலம் வழியாக செல்லும் நிலை உள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையின் போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், இரும்புலிச்சேரி தரைப்பாலம் வெள்ளத்தில் சேதமடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால், 3 கிராமங்களில் போக்குவரத்து தடைபட்டு மக்கள் ஊருக்குள்ளேயே முடங்கினர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் நிவாரணப் பொருட்களை படகு மூலம் கிராம மக்களுக்கு அனுப்பியது.

பின்னர், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்த பின், தற்காலிகமாக மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டது. இதில், போக்குவரத்து நடைபெற்றது. எனினும், தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரும்புலிச்சேரி பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் மீண் டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரும்புலிச்சேரி உட்பட 3 கிராமங்களில் போக்குவரத்து தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, இரும்புலிச்சேரி கிராம மக்கள் கூறியதாவது:

வெள்ளப்பெருக்கில் சேத மடைந்த தரைப்பாலத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்த அமைச்சர்கள், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதேபோல், கடந்த ஆண்டு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரும் விரைவில் பாலம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை நடவடிக்கையில்லை. இதனால், ஆற்றை கடந்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை மேம்பாலப் பணிகள் உதவி பொறியாளர் கலைவாணி கூறியதாவது:

இரும்புலிச்சேரியில் பாலாற் றின் குறுக்கே புதிய மேம்பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மண் பரிசோதனை மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வந்ததும். திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் படும். அரசு நிதி ஒதுக்கியதும் பணிகள் தொடங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x