Published : 28 May 2023 04:56 PM
Last Updated : 28 May 2023 04:56 PM

கரூர் வருமான வரித்துறை சோதனையில் ஆவணங்கள், ரூ. 3.5 கோடி பறிமுதல்?

வருமான வரித்துறை சோதனை

கரூர்: கரூர் வருமான வரித்துறை சோதனையில் ஆவணங்கள் மற்றும் ரூ. 3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்துவதற்காக கடந்த 26ம் தேதி வருமான வரித்துறையினர் வருகை தந்தனர்.

சோதனைக்கு சென்ற இடங்களில் அவர்களின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி. அலுவலகம் சென்றனர். இதனால் சோதனை மாலை வரை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 6 இடங்களில் மாலை முதல் சோதனை நடைபெற்றது. கோவையில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் 100க்கும் மேற்பட்டனர் வந்தனர். அன்று இரவு துணை மேயர் சரவணன் வீட்டிற்கு சோதனைக்கு சென்ற வருமான வரித்துறையினர், வீட்டுக்கு சீல் வைத்தனர். அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பால் சீல் அகற்றப்பட்டது.

கொங்கு மெஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நடந்த சோதனையில் சோதனை முடிவடையாததால் கொங்கு மெஸ் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 28ம் தேதி) கரூர் ராயனூர் தீரன் நகரில் உள்ள கரூர் மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன், அதே பகுதியில் அமைந்துள்ள சோடா நிறுவன உரிமையாளர் மணிகண்டன் வீடு, ராயனூர் சன் நகரில் அமைந்துள்ள செல்லமுத்து வீடு, வடக்கு காந்திகிராமத்தில் அமைந்துள்ள பிரேம்குமார், வையாபுரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம், கரூர் கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் உணவகம், பவித்திரம் பகுதியில் உள்ள ரெடிமிக்ஸ் நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x