

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, சென்னை எழும்பூர் - பெங்களூரு இடையே இன்றும் (28-ம் தேதி), நாளையும் (29-ம் தேதி) சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்.06519/20) இயக்கப்படுகிறது.
எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறு மார்க்கத்தில் எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.