விசிகவினர் வீடுகளில் நாளை கருப்புக் கொடி ஏற்ற வேண்டும்: தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்

விசிகவினர் வீடுகளில் நாளை கருப்புக் கொடி ஏற்ற வேண்டும்: தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை கண்டித்து நாளை (மே 28) வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என கட்சித் தொண்டர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமரே திறக்கிறார்.

குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவர் ஆகிய இருவரும் விழாவுக்கு அழைக்கப்படவில்லை. அது மட்டுமின்றி தீவிர சனாதன பற்றாளர் சாவர்க்கரின் பிறந்தநாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையே.

ஜனநாயகத்தின் கோயில் என்று கருதப்படும் நாடாளுமன்ற கட்டிடத்தை இப்படியான ஒருவரது பிறந்தநாளில் திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பாகும்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் மே 28-ம் தேதி (நாளை) விசிகவினர் அனைவரும் வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும், கருப்பு உடை அணிய வேண்டும். இதில் உடன்பாடு உள்ள ஜனநாயக சக்திகளும் தமது கண்டனத்தை பதிவு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in