திட்டக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் குளிரூட்டும் வசதி இல்லாததால் சடலங்கள் துர்நாற்றம் வீசுகின்றன

திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறை,
திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறை,
Updated on
1 min read

விருத்தாசலம்: திட்டக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் குளிரூட்டும் வசதிஇல்லாததால், அங்கிருந்து துர்நாற்றம்வீசுவதாக மருத்துவமனை அருகாமையில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடிநகராட்சியில் அரசு மருத்துவமனையில் சுமார் 40 படுக்கைகள் உள்ளது. தினந்தோறும் சுமார் 300 முதல் 350 புறநோயாளிகள் இங்கு வந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இம்மருத்துவமனை வளாகத்தில்உயிரிழந்தவர்களின் உடல்களைஉரியவர்களிடம் ஒப்படைக்க மற்றும்பிரேத பரிசோதனைக்காக பிணவறைஒன்று இயங்கி வருகிறது. இந்தபிணவறையில் கடந்த 2 வருடங்களாக குளிர்சாதன உபகரணம் செயல்படவில்லை.

குளிர்சாதன வசதி இல்லாததால், இங்கு வைக்கப்படும் சடலங்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதாக அரசுமருத்துவமனையின் அருகில் குடியிருப்போர் குற்றம்சாட்டுகின்றனர்.

மருத்துவமனை அருகில் வசிக்கும்குடியிருப்புவாசிகள் துர்நாற்றத்தைதாங்க முடியாமல் இதுபற்றி மருத்துவமனையில் புகார் செய்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

மேலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழந்தோரின் உடல்கள், உடனடியாக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.

இதன் காரணமாக பிறவட்டாரஅரசு மருத்துவமனைகளின் பிணவறைகளை கூட கூடுதல் பராமரிப்புடன் பேண வேண்டிய அவசியத்தில் இது உள்ளது.

ஆனாலும், அடிப்படை தேவையான குளிரூட்டும் வசதி கூட இல்லாதது இந்த துர்நாற்றத்திற்கு அடிப்படை காரணமாக உள்ளது என்கின்றனர் அப்பகுதியில் வசிப்பவர்கள்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினரின் விளக்கத்தை அறிய திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்வேந்திரன் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனையின் இணை இயக்குநரை தொடர்பு கொண்டபோது, அவர்கள் இதுதொடர்பாக பேச முன்வரவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in