Published : 27 May 2023 06:00 AM
Last Updated : 27 May 2023 06:00 AM

வேலூர் | சாராய வியாபாரிகளுக்கு கிடுக்கிப்பிடி: ரூ.1 லட்சம் மதிப்பிலான வெல்லம் பறிமுதல்

பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான குழு வினர் சாராய வியாபாரிகளுக்காக பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் சாராய ஒழிப்பு பணியில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வெல்லம் பறிமுதல் செய்யும் நடவடிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது. பேரணாம்பட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 2,700 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க புதிதாக பொறுப் பேற்றுள்ள காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உறுதி அளித்துள்ளார். அதன்படி, சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் கருப்பு வெல் லத்தை பறிமுதல் செய்ய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

கலால் பிரிவு மற்றும் காவல் நிலைய காவலர்கள் சோதனையில் பல ஆண்டு களாக கிடப்பில் போடப்பட்ட வெல்லம் பறிமுதல் நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. சாராயம் காய்ச்சு வதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் முக்கியமானது கருப்பு நிற வெல்லம். இந்த வகை வெல்லம் சாராய வியாபாரிகளுக்காகவே சிலர் தனியாக தயாரித்து விற்கின்றனர். இந்த வெல் லத்தை பறிமுதல் செய்தால் சாராயம் காய்ச்சும் பணியில் தொய்வு ஏற்படும்.

அதன்படி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையி னருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பேரணாம்பட்டு பஜார் வீதியில் அனீஸ் என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடையில் 50 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அனீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அதேபோல், பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையி லான காவலர்கள் பஜார் வீதியில் உள்ள பழனி என்பவருக்கு சொந்தமான கடையில் நடத்திய சோதனையில் 40 மூட்டைகளில் இருந்த சுமார் 1,200 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்து பழனியை கைது செய்தனர்.

பேரணாம்பட்டு பகுதியில் ஒரே நாளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 2,700 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

‘‘வேலூர் மாவட்டத்தில் சாராயத்தை ஒழிக்கும் பணியில் வெல்லம் பறிமுதல் நடவடிக்கை முக்கியமானதாக இருக் கிறது. அதேபோல், சாராய வியாபாரிகள் நீல நிற பிளாஸ்டிக் பேரல்கள் வாங்கி செல்வதும் தடுக்கப்படும். இந்த இரண்டு நடவடிக்கையும் சாராய வியா பாரிகளுக்கு வரும் நாட்களில் முட்டுக் கட்டையாக இருக்கும்’’ என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x