குடிமைப்பணி தேர்வு முடிவுகளில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சாதனை

ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோரை வாழ்த்துகிறார் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீபூமிநாதன்.
ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோரை வாழ்த்துகிறார் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீபூமிநாதன்.
Updated on
1 min read

சென்னை: இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகள்நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளன. இறுதித் தேர்வில் 933 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 151 பேர் கிங்மேக்கர்ஸ் மாணவர்கள்.

மேலும் சிறப்பு நிகழ்வாக கிங்மேக்கர்ஸ் அகாடமியின் மாணவியான இஷிதா கிஷோர் இந்திய அளவில் முதலிடம் பெற்றுசாதனை படைத்துள்ளார். மேலும் கிங்மேக்கர்ஸ் அகாடமியின் மாணவர்களான ஸ்மிருதி மிஷ்ரா மற்றும் ராகுல் வஸ்தவா ஆகியோர் தேசிய அளவில் முறையே 4 மற்றும் 10-ம் இடங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ்அகாடமி மாணவர்கள், தேசியபட்டியலில் முதல் 10 இடங்களில்3 பேரும், முதல் 50 இடங்களில் 7 பேரும், முதல் 100 இடங்களில்13 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் சத்யபூமிநாதன் தெரிவித்தார்.

நடப்பு ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள், தற்போதுகல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் தங்களது ஆட்சிப்பணிக் கனவை நனவாக்க உதவும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்சி வகுப்புகளின் சேர்க்கை சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள அகாடமியின் கிளைகளில் நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in