நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைப்பதை ஏற்க இயலாது: வைகோ

புதிய பாராளுமன்றம் (இடது), வைகோ (வலது)
புதிய பாராளுமன்றம் (இடது), வைகோ (வலது)
Updated on
1 min read

சென்னை: "இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது.

திமுக உள்ளிட்ட கட்சிகள் திறப்பு விழாவில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளன. எனவே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் அந்த நியாயமான கருத்தை ஏற்றுக்கொண்டு திறப்பு விழாவில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளது" எனத் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. | விரிவாக வாசிக்க > புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in