

சென்னை: ஆயுர்வேத மருந்தான ‘கிலோய்’ குறித்த ஆராய்ச்சியில் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆயுர்வேதத்தின் புகழ்பெற்ற மருந்தான, குடுச்சி (கிலோய்) (டினோஸ்போரா கார்டிஃபோலியா) அமிர்தா என்றும் அழைக்கப்படுகிறது. இது கரோனா தொற்று காலத்தில் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது.
உலகிலேயே முதன்முறையாக பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ‘கிலோய்’ குறித்து விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். சிறந்த ஆய்வக நடைமுறைகளின்படி செய்யப்பட்ட ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட ஆண், பெண் எலிகளுக்கு 28 நாட்களுக்கு தினமும், சாதாரண பரிந்துரைக்கப்பட்ட மனித அளவை விட 5 மடங்கு வரை அதிக கிலோய் வழங்கப்பட்டது.
பின்னர் உடலின் 40-க்கும் மேற்பட்ட உறுப்புகளில் கிலோய் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் கிலோயின் நுகர்வால் எந்த உறுப்புக்கும் எவ்வித பக்க விளைவுகளோ பாதகமான விளைவுகளோ ஏற்படவில்லை எனத் தெரிந்தது.
இதுமட்டுமின்றி கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு, இதயம், கொழுப்புச்சத்து போன்றவை தொடர்பான மருத்துவ உயிர்வேதியியல் விவரங்களும் சோதிக்கப்பட்டன. இதில் இரு பாலினத்திலும் தீங்கு விளைவிக்கும் மாற்றங்கள் காணப்படவில்லை. இந்த முழுமையான பரிசோதனை ஓஇசிடி-யின் உலகளாவிய வழிகாட்டுதல்களின்படி சிறந்த ஆய்வக நடைமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆராய்ச்சி முயற்சிகள் குறித்து பதஞ்சலி பெருமிதம் கொள்கிறது. உண்மையில் கிலோய் ஒரு அமுதம். ஒருவர் அதை சரியாக எடுத்துக்கொண்டால் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க முடியும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.