Published : 24 May 2023 06:10 AM
Last Updated : 24 May 2023 06:10 AM
சென்னை: அரசு பேருந்துகள் நின்று செல்வதற்கான உரிமம் பெற்ற பயண வழி உணவக விவரங்கள் போக்குவரத்துத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தொலைதூரம் செல்லக் கூடிய அரசு பேருந்துகளில் பயணிப்போர், உணவருந்துதல், இயற்கை உபாதைகளை கழித்தல் போன்றவற்றுக்கு நெடுஞ்சாலையில் இருக்கும் உணவகத்தில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அங்கு அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை, கழிப்பறை தூய்மையின்மை, பயன்படுத்த கட்டணம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பயணிகள் தரப்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக அவ்வப்போது உணவு பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, போக்குவரத்து துறையின் உரிமம் பெறாத உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
எனவே, பயணிகள் அறியும் வகையில் பேருந்து நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற உணவக பட்டியலை வெளியிட வேண்டும் என தொடர் கோரிக்கையை சமூக அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக தற்போதுபேருந்துகளை நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற 51 உணவகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அரசுபஸ் (arasubus) என்ற இணையதளத்தில் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT