10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் - 1 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் பாராட்டு
சென்னை: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 21 மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள், நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றவி.கீர்த்தனா, எம்.பர்ஹானா, எச்.திராஜ், ஜெ.விஷ்வா, எஸ்.மணிகண்டன், எஸ்.குமரவேல், எ.தருனா, முத்துலட்சுமி, எ.ஸ்வேதா, ஆர்.ஜெய பிரியாமற்றும் ஜி.ஹரிஷ் ஆகியோருக்கும், பிளஸ்-1 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆர்.சித்ரா, எம்.மகேஸ்வரி, எம்.ஸ்வேதா, பி.ஹரிணி பிரியா, வி.திவ்யா, எம்.பெமின் ஆம்ரா, ஜெ.நேகா, கே.ப்ரீத்தி, எஸ்.ஷாருக் மற்றும் கே.மேனகா ஆகியோருக்கும் மேயர் பிரியா பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
மேலும், உயர்க்கல்வி படிப்பிலும் தனிக்கவனம் செலுத்தி சிறப்பாக கல்வி பயிலுமாறு அவர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து, பொதுத் தேர்வில் மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ரங்கராஜபுரம், ஆயிரம் விளக்கு உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் அப்பாசாமி தெரு, லாயிட்ஸ் சாலை மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மேயர் பிரியா நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கல்வி நிலைக்குழுத் தலைவர்விஸ்வநாதன், கல்வி துணை ஆணையர் ஷரண்யாஉள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
