

அரசு அங்கீகாரம் பெறாமல் விதி களை மீறி சென்னையில் செயல் படும் 700-க்கும் மேற்பட்ட மழலை யர் பள்ளிகளை மூட அரசுக்கு உத்தர விடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலசுப்பிரமணி யன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி மாநிலத்தில் செயல்படும் எந்தப் பள்ளியும் அரசின் அங்கீகாரத்தை பெற்றுத்தான் செயல்பட வேண்டும். உறுதித் தன்மை மிக்க கட்டிடம், சுகாதார வசதிகள், விளையாட்டு மைதானம் உட்பட பள்ளியில் உள்ள பல்வேறு வசதிகள் குறித்து அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சான்றிதழ் அளித்திருக்க வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றாமலும், அரசின் அங்கீகாரத்தை பெறாமலும் சென்னையில் 700-க்கும் மேற்பட்ட தனியார் மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அந்தப் பள்ளி களில் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரத் துக்கும் மேல் கட்டணமாக வசூலிக் கப்படுகிறது. இத்தகைய பள்ளிகளால் மாணவர்களும், பெற்றோர்களும் பல்வேறு பாதிப்புகளை அடைந்துள்ளனர்.
ஆகவே, சென்னையில் அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் பள்ளிகளை மூடுமாறும், அங்கு பயிலும் மழலையர்களை அங்கீகாரம் பெற்ற வேறு பள்ளிகளில் சேர்க்குமாறும் பள்ளிக் கல்வித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்தி வைத்தனர்.