Published : 27 Jul 2014 12:36 PM
Last Updated : 27 Jul 2014 12:36 PM

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு சோழ மன்னன் பெயரை சூட்ட வேண்டும்: ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழாவில் வலியுறுத்தல்

கங்கை கொண்ட சோழபுரத்தில் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா மற்றும் அவரது ஆடி திருவாதிரை பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை சிறப்பாக நடைபெற்றன.

தஞ்சையில் புறப்பட்ட தொடர் தீபச் சுடரோட்டத்தை கங்கை கொண்ட சோழபுரத்தில் வரவேற் றது முதல் அன்றைய நிகழ்ச்சிகள் தொடங்கின. தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தாஷீலா நாயர், நாகர்கோவில் ஒழுங்குமுறை விசாரணை ஆணையர் செந்தில் குமார், தொல்லியல் துறை மண்டல கண்காணிப்பாளர் மகேஸ் வரி, துறையின் ஓய்வு பெற்ற கண்கா ணிப்பாளர் நரசிம்மன் ஆகியோர் பிரகதீஸ்வரர் கோயிலின் 4 வாயில் களிலும் தீபம் ஏற்றி தொடங்கி வைக்க, பெண்கள் கூடி 1,000 தீபங்களை ஏற்றி வைத்து அந்திமாலையில் தீபப் பொன்னொளியில் கோயிலை ஜொலிக்க வைத்தனர்.

சோழ அரண்மனை அகழாய்வு செய்யப்பட்ட மாளிகைமேடு பகுதி யிலிருந்து அறிஞர்களுக்கான பாராட்டு ஊர்வலமும் நடை பெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் சென்னை பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் பொற்கோ தலைமையில் எழுத்தாளர் பாலகுமாரன், தமிழக வேளாண் துறை ஆணையர் ம.ராசேந்திரன், அரசு முன்னாள் செயலர் கி.தனவேல், தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன், அரியலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் இல.தியாக ராஜன் ஆகியோர் ராசேந்திர சோழனின் புகழ் குறித்துப் பேசினர்.

ராசேந்திர சோழனின் அழகும், வீரமும், நிர்வாகமும் அறிஞர்களின் உரையில் வளையவந்தன. ராசேந் திரனின் அணுக்கி பரவை நங்கை பற்றி பாலகுமாரன் எடுத்து கொடுக்க, அடுத்துப் பேசியவர்கள் அதை தொட்டுத் தொடர்ந்து வரலாறும் புனைவும் பிணைந்த சுவையான உரையை வழங்கினர்.

இந்திய வரலாற்றின் போக்கை மாற்றும் ஒரு அரிய வாய்ப்பாக கஜினி முகமதுவை ராசேந் திரன் படை தடுக்க மறந்தது, 240 ஆண்டுகள் சோழப் பேரரசின் தலைநகராக திகழ்ந்த கங்கை கொண்ட சோழபுரம் இன்றைக்கு சாதாரண ஊராட்சியாக இருக் கும் ஆச்சர்யம், தாய்லாந்து விழாக்க ளில் இன்றைக்கும் ‘உலகளந்த உத்தமர்…’ பாடல் பாடப்படுவது, எகிப்துக்கு இணையான அவரது நீர்ப்பாசன நுட்பம், நீர்மயமான வெற்றித் தூணாக இன்றும் இருக்கும் ‘சோழகங்கம்’ என அறிஞர்கள் பேச்சில் சுவாரசியம் நிரம்பியிருந்தன.

கோயில்கள் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாது அருங் காட்சியகத்துக்கு இணையாக, வரும் தலைமுறையினருக்கான வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். பொன்னேரியைத் தூர்வாரி பாதுக்காக வேண்டும். திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துக்கு ராசேந்திர சோழனின் பெயர் சூட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் இந்த விழா மேடையில் முன்வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் புதுச்சேரி குணாவதி மைந்தன் எழுதி இயக்கிய ‘மாமன்னன் ராசேந்திர சோழன்- அறிமுகம்’ என்ற குறும்பட சிடி-யை கண்ணியம் திங்களிதழ் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் வெளியிட கவிஞர் அறிவுமதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பு அஞ்சல் தலையை இந்திய தொல்லியல் துறை சென்னை மண்டல முன்னாள் கண்காணிப்பாளர் நரசிம்மன் வெளியிட, ஜி.நாகேஸ்வரி பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்த் நாட்டியாஞ்சலி, இசை நிகழ்ச்சி கள் போன்றவையும் நடைபெற் றன. நிறைவாக விழா ஒருங்கிணைப் பாளர் இரா.கோமகனுக்கு அறிஞர்கள் மரியாதை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x