Published : 01 Oct 2017 11:35 AM
Last Updated : 01 Oct 2017 11:35 AM

152 சார் பதிவாளர் அலுவலகங்களில் இணையதளம் மூலம் சொத்துகளை பதிவு செய்யும் வசதி: நவம்பர் முதல் முழுவீச்சில் நடைமுறைக்கு வருகிறது

தற்போது சோதனை முயற்சியாக 152 சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் இருக்கும் ‘இணையதளம் மூலம் இணையதளம் வசதி உருவாக்கும் பணி முடிவடைந்ததையடுத்து கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி இணையதளம் மூலம் பத்திரப்பதிவு செய்யும் முறை சில சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக இதுவரை 152 சார் பதிவாளர் அலுவலகங்களில் இணையதள வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: இந்த புதிய நடைமுறையைப் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்ய விரும்புவோர் இருந்த இடத்தில் இருந்தே விண்ணப்பிக்க முடியும். மேலும் பத்திரப்பதிவுக்கு தேவையான ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதன்பின்னர் எந்த நாளில் எத்தனை மணிக்கு பத்திரப்பதிவு நடக்கும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும்.குறிப்பிட்ட நேரத்துக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றால் போதுமானது.

இந்த இணையதள வசதியை டிசிஎஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பதிவுத்துறை உருவாக்கியுள்ளது. இத னால் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக பதிவுத்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அவ்வப்போது நடைபெற்று வரும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் டிசிஎஸ் நிறுவன பிரதிநிதிகள் தொழில்நுட்பம் குறித்து விளக்கி வருகின்றனர். பெரும்பாலான அலுவலகங்களில் பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இணையதளம் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு உதவ சார் பதிவாளர் அலுவலகங்களில் வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

நவம்பர் மாதம் முதல்

இந்த புதிய நடைமுறை குறித்து பதிவுத்துறை தலைவர் குமரகுருபரனிடம் கேட்டபோது, “இணையதளம் உருவாக்கும் பணிகள் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. தற்போது சோதனை முயற்சியில் செயல்படுத்தி வரும் இடங்களில் குறை கள் ஏற்பட்டால், அதனை களைந்து வருகிறோம். அனைத்து குறைகளும் களையப்பட்டு, வரும் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் 575 அலுவலகங்களிலும் இணையதளம் முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வரும். இதனை முதல்வர் தொடங்கி வைப் பார் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x