Published : 12 Oct 2017 09:28 AM
Last Updated : 12 Oct 2017 09:28 AM

டிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு தேர்வுகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதிகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிசி-யால் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் பணியில் அடங்கிய உதவி இயக்குநர், சிறை அலுவலர், புவியியலாளர், உதவி புவியியலாளர் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வு, நேர்காணல் தேர்வுக்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x