மக்களவை தேர்தலில் நான் போட்டி இல்லை: அண்ணாமலை அறிவிப்பு

மக்களவை தேர்தலில் நான் போட்டி இல்லை: அண்ணாமலை அறிவிப்பு
Updated on
1 min read

கோவை: 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. கட்சி தொண்டனாக தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவேன் என்றுபாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்த அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவல்துறையினருக்கு உரியநேரத்தில் பதவி உயர்வு கிடைப்பதில்லை. இதுகுறித்து காவல்துறை தலைவர் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2021-22-ம் ஆண்டை விட 2022-23-ம்ஆண்டில் தமிழகத்தில் 22 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 53 ஆயிரம்லிட்டர் சாராயம் போலீஸால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 75 சதவீத டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் கள் விற்பனை செய்ய வேண்டும். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் வருமானத்தை எவ்வாறு ஈட்ட முடியும் என விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் மக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

1985-க்கு பின் கர்நாடகத்தில் ஆளுங்கட்சி திரும்ப ஆட்சிக்கு வந்ததில்லை. ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இல்லை. அவற்றை அதிகம் வைத்துள்ளவர்கள் பதுக்கிவைத்தவர்கள். எனவே, அவர்களுக்கு மட்டும்தான் பிரச்சினை.

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குதான் பாஜகவில் இணைந்தேன். கட்சி தொண்டனாக தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லிக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டு மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in