

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு மே 15-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (திங்கள்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) பி.ஏ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “இன்று (மே 22) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.