ஆவின் நிறுவனத்தின் மூலம் அரசே குடிநீர் விற்பனையில் ஈடுபடுவது நியாயமா? - அண்ணாமலை கேள்வி

ஆவின் நிறுவனத்தின் மூலம் அரசே குடிநீர் விற்பனையில் ஈடுபடுவது நியாயமா? - அண்ணாமலை கேள்வி
Updated on
1 min read

சென்னை: ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது நியாயமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2014-15-ம்ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்தபோது, அதனை இலவசமாக வழங்க வேண்டும்.

குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதை விட்டுவிட்டு, அரசேவிற்பனையில் ஈடுபடக் கூடாதுஎன்றெல்லாம் போராட்டம் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.

குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்?

உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in