

சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2-வது கட்ட கேம்பிரிட்ஜ் ஆங்கிலப் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கப் பட்டது.
இதற்கான தொடக்க விழா தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்தது. பயிற்சி பற்றி கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி மதிப்பீட்டின் தெற்காசிய இயக்குநர் ஏஞ்சலா பிரெஞ்ச் கூறியதாவது:
ஆங்கிலத்தில் எழுதுவது, படிப்பதற்கே இந்தியப் பள்ளிகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எங்களிடம் பயிற்சிக்கு வந்த ஆசிரியர்களிடம் ஆங்கிலத்தில் பேசும், கவனித்துக் கேட்கும் திறன் குறைவாக இருந்தது. எனவே, அவற்றில் கவனம் செலுத்தினோம். ஆசிரியர்களுக்கு 48 மணி நேர பயிற்சி வகுப்புகள் நடந்துள்ளன. இதன் இறுதியில் கேம்பிரிட்ஜ் நடத்தும் சர்வதேச ஆங்கிலத் தேர்வை ஆசிரியர்கள் எழுதி வெவ்வேறு நிலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்திட்டத்துக்கான நிதியை டெக் மஹிந்த்ரா பவுண்டேஷன் வழங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்கட்டப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து பலர் சான்றிதழைப் பெற்றனர்.