ராமேசுவர விசைப்படகுகளை அரசுடமையாக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு

ராமேசுவர விசைப்படகுகளை அரசுடமையாக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகள், கடந்த 19.12.21-ல் தனுஷ்கோடி- இலங்கையின் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தன.

அப்போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து, அதிலிருந்த மீனவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

இதில் மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். ராமேசுவரத்தை சேர்ந்த அருளானந்தம், செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான இந்த படகுகள் மீதான வழக்கு இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இலங்கை மன்னார் நீதிமன்ற நீதிபதி 2 விசைப்படகுகளையும் அரசுடமையாக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in