Published : 20 May 2023 06:25 AM
Last Updated : 20 May 2023 06:25 AM
சென்னை: கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: விழுப்புரம் மரக்காணம், மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்பு. எனவே, இந்த விசாரணையை சிபிஐ யிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆலைகளில் உற்பத்தி ஆகும் 60 சதவீதம் மதுதான் டாஸ்மாக்குக்கு போகிறது. மீதம் 40 கள்ளச்சந்தைக்கு போகிறது. ஜூன் 15-ம் தேதிக்குள் டாஸ்மாக்கை மூட வேண்டும். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மது உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT