Published : 06 Oct 2017 09:28 AM
Last Updated : 06 Oct 2017 09:28 AM

போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் எவ்வளவு? - அமைச்சர் இன்று ஆலோசனை

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு என்பது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் மொத்தம் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையின்போது போனஸ் வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டுமென போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் இன்று பல்லவன் இல்லத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில், நிதித்துறை அதிகாரிகள், நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, இன்னும் ஒரு வாரத்தில் போனஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x