Published : 19 May 2023 06:15 AM
Last Updated : 19 May 2023 06:15 AM

சென்னைக்கு அதிகபட்ச மின் விநியோகம் தடையின்றி வழங்கப்பட்டது: அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் அதிக மின்தேவை, தடையின்றி பூர்த்தி செய்யப்பட்டது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், சென்னையின் அதிகபட்ச மின் தேவை 3,738 மெகாவாட் மட்டுமே. கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி இந்த தேவை எட்டப்பட்டது.

இந்நிலையில், சென்னையின் நேற்று முன்தின மின் தேவை 4,044 மெகாவாட் ஆகும். இந்த தேவை, எந்த தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச தேவை மே 16-ம் தேதியன்று 4,016 மெகாவாட் ஆகும். அதேபோல, நேற்று முன்தினம் மின் நுகர்வு 9.03 கோடி யூனிட் ஆகும். இதற்கு முன் அதிகபட்சமாக மே 16-ம்தேதி 9.02 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x