ரூ.9.79 கோடியில் 26 ரயில் நிலையங்களில் 528 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு

ரூ.9.79 கோடியில் 26 ரயில் நிலையங்களில் 528 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு
Updated on
1 min read

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 26 ரயில் நிலையங்களில் 528 சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வேநிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட முக்கியரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு ரயில்நிலையத்திலும் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதேபோல, 26 ரயில்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வேகோட்ட அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக சிந்தாரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், மந்தைவெளி, பசுமைவழிசாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, கோட்டை, பூங்கா, பார்க்டவுன், சேத்துபட்டு, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிட்டோரியம், மேல்மருவத்தூர் ஆகிய 26 நிலையங்களில் மொத்தம் 528 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இதற்காக, ரூ.9.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் 10 சிசிடிவிகேமராக்கள் முதல் 25 சிசிடிவி கேமராக்கள் வரை பொருத்தப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in