Published : 19 May 2023 06:20 AM
Last Updated : 19 May 2023 06:20 AM

ஓபிஎஸ் தரப்பினர் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினர், இன்று மற்றும் நாளை 5 மாவட்டங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

இது குறித்து ஓபிஎஸ் தரப்பு வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.சி.டி. பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்புச் செயலாளர்கள் வா.புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இன்று (மே 19) மற்றும் நாளை (மே 20) தமிழகத்தின் 5 மாவட்டங்களில், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தஉள்ளனர்.

அதன்படி இன்று, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களிலும், நாளை நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x