

திருப்பூர்: கள்ளச்சாராயத்தை ஒழிக்க தென்னை, பனை மரங்களில் கள் இறக்க தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டுமென கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
அவிநாசியில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.கள்ளச்சாராயத்தை ஒழிக்க,தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.
தேங்காய் விலை குறைந்துவிட்டதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பாமாயில் இறக்குமதியை தடை செய்துவிட்டு, அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.