

பொன்னேரி: வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரு அலகுகளில் கொதிகலன் பழுது காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டுபுதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதல் நிலையின் 3 அலகுகளில் 630 மெகாவாட், 2-வது நிலையின் இரு அலகுகளில் 1,200 மெகாவாட் என மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2-வது நிலையின் இரு அலகுகளில் நேற்று கொதிகலன் பழுது ஏற்பட்டது. இதனால் இவ்விரு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.