

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புதியபாலங்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில், பெரம்பூர் நெடுஞ்சாலையில் புளியந்தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் ஸ்டீபன்சன் சாலையில் ரூ.43.46 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லாகால்வாயின் குறுக்கே உள்ள பழைய பாலம்அகற்றப்பட்டு, சுமார் 282 மீ. நீளம் மற்றும் 22.70 மீ.அகலத்துடன் கூடிய புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல், கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையின் மேல் ரூ.142 கோடி மதிப்பீட்டில் 678 மீ. நீளம் மற்றும் 15.20 மீஅகலத்தில் இருபுறமும் பயணிக்கும் வகையில் 4 வழிப் பாதையுடன் புதிதாக ரயில்வேமேம்பாலம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தமேம்பாலப் பணிகளைப் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மேம்பால பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.