சின்னசேலம் வட்டாட்சியருக்கு மிரட்டல்: விசிக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

சின்னசேலம் வட்டாட்சியருக்கு மிரட்டல்: விசிக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

Published on

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் பொது இடத்தில் கட்சிக் கொடிக் கம்பம் நடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சின்னசேலம் வட்டாட்சியர் இந்திராவுக்கு மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த வாசுதேவனூர் பேருந்து நிறுத்தம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடிக் கம்பம் நட்டுள்ளனர். இதைக் கண்ட கிராம நிர்வாக அலுவலர், கட்சிக் கொடிக் கம்பவம் அகற்றுவது குறித்து சின்னசேலம் வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வட்டாட்சியர் இந்திரா, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீஸார் கொடிக்கம்பத்தை அகற்றச் சென்றபோது, அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தனபால், கொடிக் கம்பத்தை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்ததோடு, வட்டாட்சியர் இந்திராவை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் அனைத்தும் காவல் துறையினர் முன்னிலையிலேயே நடந்துள்ளது.

இதனால் அங்கிருந்து சென்று வட்டாட்சியர் இந்திரா, தனபால் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in