கிராமங்களில் மின் விநியோகம் | தமிழகத்தில் தேசிய சராசரியைவிட அதிகம்: மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் பாராட்டு
சென்னை: தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் தேசிய சராசரியைவிட உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க..ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் கடந்த 2021-22-ம் ஆண்டில், அது தினசரி 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டில் தினசரி 22 மணி நேரம் 15 நிமிடங்களாகவும் உயர்ந்துள்ளது. இதற்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தமிழகத்தில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகம் வழங்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
