

திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை ஜூன் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளதாகஅமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ வேலு கூறியதாவது: திருவாரூர் அருகே காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை ஜூன் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைக்க உள்ளார்.
கள்ளச் சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறி உள்ளார். முதல்வர் பதவியில் அவர் இருந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் எத்தனை முறை அவர் பதவி விலகி இருக்க வேண்டும் என்றார்.