Published : 17 May 2023 06:09 AM
Last Updated : 17 May 2023 06:09 AM
சென்னை: எம்ஆர்பி தேர்வு எழுதி அரசு மருத்துவமனைகளில் 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மருத்துவர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மருத்துவர் மு.அகிலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) 2018-ம்நடத்திய தேர்வில் வெற்றி பெற்று2019-ல் அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்த மருத்துவர்கள் 4 ஆண்டுகள் முடிந்த பின்னரும், அவர்களை இன்னும் பணிவரன்முறை செய்து ஆணைகள் வழங்கப்படவிலை.
வருத்தமளிக்கிறது: இதுபற்றி பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது வருத்தமளிக்கிறது. உடனடியாக மருத்துவர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும்.
விரைவில் கலந்தாய்வு: எம்ஆர்பி நியமன கலந்தாய்வு மற்றும் அரசு மருத்துவர்களுக்கான பட்ட மேற்படிப்பு கலந்தாய்வு விரைவில் நடைபெறவுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் அரசுசாரா மருத்துவர்கள் ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் உள்ளனர். அவர்களை அவர்களது கல்வித்தகுதி, மருத்துவமனையின் படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியிடங்களை ஒதுக்க வேண்டும்.
காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு எம்ஆர்பி நியமன கலந்தாய்வு மற்றும் அரசு மருத்துவர்களுக்கான பட்டமேற்படிப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT