Published : 17 May 2023 06:20 AM
Last Updated : 17 May 2023 06:20 AM

தமிழகத்தில் மதுவை ஒழிக்க இபிஎஸ் போராட்டம் நடத்தினால் நாங்கள் ஆதரவு தருவோம்: திருமாவளவன்

கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் நலம் விசாரித்தார்.

விழுப்புரம்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மதுவை ஒழிக்க போராட்டம் நடத்தினால் அவருக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுக்க தயாராக உள்ளோம் என்று விசிக தலைவர்திருமாவளவன் எம்பி குறிப்பிட்டார்.

மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திஉடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நேற்று ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை பூரணமதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசுமதுவிலக்கு கொள்கையைதீவிரமாக நடைமுறைப்படுத் தாதவரை கள்ளச்சாராய விற்ப னையை தடுக்க முடியாது.

அரசே மது வணிகத்தை நடத்துவது ஏற்புடையதல்ல. கள்ளச்சாராய விற்பனை குறித்து அரசு கண்டும் காணாமல் இருப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவதற்கு முதல்கட்ட நடவடிக் கையாக, சிறப்பு உளவுப் பிரிவை அமைக்க வேண்டும். இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

மது அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் விதவைகளாகவும், அநாதைகளாகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். எந்தப் பகுதியில் அதிக ளவில் மது விற்பனையாகிறதோ அந்தப் பகுதிகளை கண் டறிந்து, விதவைகளாக வாழக் கூடியவர்களின் குடும்பத்தினரை அரசு தத்தெடுத்து, தனி நிதியை ஒதுக்கீடு செய்து அவர்களை பராமரிக்க முன்வர வேண்டும்.

குடிநோய் என்பது தீர்க்க முடியாத ஒன்றல்ல. அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே குடிப்பழக்கம் அதிகம் உள்ளவர் களை கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் உளவியல் ரீதியாக மருத்துவ ஆலோசனை வழங்க தேவையான மையங்களை ஏற்படுத்த வேண்டும். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய பழனிசாமி மதுவை ஒழிப்பதற்காக எங்காவது போராட்டம் நடத்தி இருக்கிறாரா? இனி அவர் மதுவை ஒழிக்க போராட்டம் நடத்துவார் என்றால் அவரோடு சேர்ந்து நாங்கள் குரல் கொடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x