குற்றவாளிக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கும் ‘கோமாளித்தன’ திமுக அரசு: இபிஎஸ் கடும் விமர்சனம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

சென்னை: "போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு இந்த அரசு அதை போலி மதுபானத்தால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருக்கிறது. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ள அம்மாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்கிறவருடைய தம்பி ஆவார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாவாசை தானும் அந்த மதுபானத்தை அருந்தியதாக அவரும் மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டார்.

இந்நிலையில், போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு இந்த அரசு அதை போலி மதுபானத்தால் பாதிக்கபட்டவருக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருக்கிறது. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும். சில நாட்களுக்கு முன்னாள் ஒருவர் தன்னை மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் கேப்டன் என்று பொய் சொல்லி முதல்வரை சந்தித்து ஒருவர் பரிசு பெற்று செல்கிறார் தற்போது என்னவென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சி உயிரைப் பறித்தவருக்கு அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பது போல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது . இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்துலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்குகின்ற கோமாளித்தனமான ஒரே அரசு தற்போது ஆட்சியிலுள்ள திமுக அரசு தான்.

நிர்வாக திறன் அற்ற முதல்வரின் தலைமையில் ஆட்சி நடக்கவில்லை இங்கே சர்க்கஸ் தான் நடக்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in