

மதுரை: மதுரையில் சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த எஸ்ஐ-யின் குடும்பத்துக்கு ரூ. 76 லட்சம் காப்பீடு தொகைக்கான காசோலையை காவல் ஆணையர் வழங்கினார்.
மதுரை மாநகர காவல்துறையில் அண்ணாநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியற்றியவர் சிறப்பு எஸ்ஐ போஸ். ராமசாமி. இவர் 2022 மே 31-ல் பணி ஓய்வு பெற்றார். சில நாட்களுக்கு முன்பு அவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்லும்போது, வாகன விபத்தில் உயிரிழந்தார். இவர் தன்னுடைய சம்பளம் மற்றும் பென்ஷன் கணக்கை எச்டிஎப்சி வங்கியில் வைத்து பராமரித்தார்.
இந்நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த எஸ்ஐ போஸ். ராமசாமி குடும்பத்துக்கு ரூ. 70 லட்சம் காப்பீடு தொகை மற்றும் அவ்வங்கியின் ஏடிஎம் கார்டு பயன்பாட்டின் மூலம் ரூ.6 லட்சமும் என மொத்தம் ரூ. 76 லட்சத்துக்கான தொகையை எடிஎப்சி வங்கி நிர்வாகம் வழங்கியது. இதற்கான விழாவில் வங்கி காசோலையை மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், போஸ் குடும்பத்தினரிடம் வழங்கினார். காவல் துணை ஆணையர் மங்களேசுவரன் மற்றும் வங்கி அதிகாரிகள் சுரேஷ், யுவராஜ், சண்முகம், அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.