Published : 16 May 2023 06:32 AM
Last Updated : 16 May 2023 06:32 AM

சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள்: ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்தவர்கள், சிறந்த சமூகசேவகர், தொண்டு நிறுவனத்துக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சமூக நலத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தங்கப்பதக்கம், ரொக்கம் பரிசு: சுதந்திர தின விழாவில், சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ்வழங்கப்படும். சிறந்த நிறுவனத்துக்கு ரூ.50,000, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

2023-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது, சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் வழங்கப்படஉள்ளதால், இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைத்து விவரங்களையும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் www.awards.tn.gov.in பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்: தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு, 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம்,பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ், ஆங்கிலம் புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு பக்கம் தனியாரை பற்றிய விவரம் - தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் இணைப்பு – படிவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x