Published : 15 May 2023 06:21 AM
Last Updated : 15 May 2023 06:21 AM

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மாதவரம், பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் தீவிரம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி வரை 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் தீவிரமடைந்துள்ளன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம், கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வரை 4-வதுவழித்தடம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் ஆகிய 3 வழித்தடங்களில் பல்வேறுஇடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஒரு வழித்தடமான மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தில் மாதவரம், பசுமைவழிச் சாலையில் சுரங்கப்பாதை பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மாதவரம் பால்பண்ணை அருகில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கியது. தற்போது, இப்பணி விறுவிறுப்படைந்துள்ளது. மாதவரம் பால் பண்ணை-மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான முதலாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் 'நீலகிரி', மொத்த நீளமான 1,380 மீட்டரில் 790 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் 'பொதிகை' மொத்த நீளமான 1,380 மீட்டரில் 351 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது.

மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் வரையிலான 3-வது சுரங்கம் தோண்டும்இயந்திரம் `ஆனைமலை' மொத்தநீளமான 410 மீட்டரில் 275 மீட்டர்நீளத்தை கடந்துள்ளது. மாதவரம்பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான 4-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் `சேர்வராயன்' சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட உள்ளது.

இதே வழித்தடத்தில் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணி 1.226 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி கடந்த பிப்.16-ம் தேதி தொடங்கியது. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரத்துக்கு `காவேரி' என பெயரிப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம், முக்கியமாக டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதைஅமைத்து, திருவிக பாலம் அருகேஅடையாறு ஆற்றைக் கடந்துஅடையாறு சந்திப்பு நிலையத்துக்கு ஆகஸ்ட்டில் அடையும். பசுமைவழிச் சாலையில் இருந்துஇயக்கப்படும் அடுத்த சுரங்கம்தோண்டும் இயந்திரத்துக்கு `அடையாறு' என பெயரிடப்பட்டுள்ளது. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி தற்போது வரை 65 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கெல்லீஸ் முதல் தரமணி வரை 8 சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படஉள்ளது.

சேத்துப்பட்டு ஏரி பகுதியில் இருந்து நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை பணி விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

9 நிலையங்கள் அகற்ற திட்டம்: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்ட வழித்தடம் தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட வரைபடம் மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில், 3 வழித்தடங்களில் மொத்த நீளம் 118.9 கி.மீ. இருந்து116.1 கி.மீ. தொலைவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், நிலையங்கள்எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. 128 நிலையங்களில் இருந்து119 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, 3-வது வழித்தடத்தில் தபால்பெட்டி, டவுட்டன் சந்திப்பு, புனித ஜோசப் கல்லூரி ஆகிய 3 நிலையங்களும், 4-வது வழித்தடத்தில் பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி ஆகிய 3 நிலையங்களும், 5-வது வழித்தடத்தில் காளியம்மன் கோவில், போரூர் சந்திப்பு, மேடவாக்கம் ஆகிய 3 நிலையங்களும் என 9 நிலையங்கள் நீக்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x