கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: விழுப்புரம் ஆட்சியர் பழனி தகவல்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரின் நலன் குறித்து விசாரிக்கும் ஆட்சியர் பழனி.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரின் நலன் குறித்து விசாரிக்கும் ஆட்சியர் பழனி.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலன் பாதிக்கப்பட்டு மரக்காணம் அரசு மருத்துவமனையில் 10 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 5 பேர் மரக்காணம் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர் புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், “பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேக சிறப்பு சிகிச்சை அறை ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மேலும் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 நபர்களை விழுப்பு ரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசார ணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரி வித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in