மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் மரணம் - 4 காவலர்கள் பணியிடை நீக்கம்

டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திர பாபு
Updated on
1 min read

சென்னை: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் மரணம் அடைந்தனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அமரன் (25) என்பவர் புதுவை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்றதும், இதனை வாங்கி எக்கியார் குப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த பலர் குடித்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மரக்காணம் போலீசார் அமரனை கைது செய்தனர். மேலும், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வரும் 10க்கும் மேற்பட்டவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கள்ளச்சாரயம் குடித்து மூவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 4 காவலர்களை பணியிட நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மரக்காணம் காவல் ஆய்வாளர் வடிவேல் அழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாள சிவகுருநாதன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in