தமிழகம் முழுவதும் லோக்-அதாலத் 80,655 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

தமிழகம் முழுவதும் லோக்-அதாலத் 80,655 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக்-அதாலத்தில் 80,655 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசீர் அகமது வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஆண்டுக்கு 4 முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.

அதன்படி, தேசிய அளவில் நேற்று லோக் அதாலத் நடந்தது. தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா வழிகாட்டுதலின் பேரில், மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் மேற்பார்வையில் மாநிலம் முழுவதும் நேற்று லோக் அதாலத் நடந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு, பி.பி.பாலாஜி, கே.ஜி.திலகவதி ஆகியோர் தலைமையில் 4 அமர்வுகளும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, கே.கே.ராமகிருஷ்ணன், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகளும், மாவட்டம், தாலுகா அளவில்நீதிபதிகள் தலைமையில் அமர்வுகள் என்று மொத்தம் 434 அமர்வுகள் அமைக்கப்பட்டன.

இந்த அமர்வுகள், செக் மோசடிவழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், விவாகரத்தை தவிர பிற வகை குடும்ப நல வழக்குகள், தொழிலாளர்கள் வழக்குகள் போன்ற வழக்குகளை விசாரணைக்கு எடுத்தன.இந்த வழக்குகளில் இருதரப்பினருடன் நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரின் சம்மதத்துடன் மாநிலம் முழுவதும் 80,655 வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.421 கோடியே 70 லட்சத்து 99,986 lநிவாரணம் கிடைத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in