

எண்ணூர் துறைமுக கழிமுக ஆய்வுக்காக தன்னை வாழ்த்தி வரவேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று (சனிக்கிழமை) காலை நடிகர் கமல்ஹாசன், எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ட்விட்டரில் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். அதில், "சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.