Published : 15 Oct 2017 09:58 AM
Last Updated : 15 Oct 2017 09:58 AM

‘தி இந்து’ , ‘சரிகம’ இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுக்கான போட்டி: இளம் கர்னாடக இசைப் பாடகர்கள் பங்கேற்கலாம்

‘தி இந்து’ மற்றும் ‘சரிகம’ நிறுவனம் இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுக்கான போட்டியில் பங்கேற்க விரும்பும் இளம் கர்னாடக இசைப் பாடகர்கள், அக்டோபர் 20-ம் தேதிக்குள் தங்கள் குரல் பதிவை அனுப்பி வைக்கலாம்.

புகழ்பெற்ற கர்னாடக இசை மேதையான எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் போற்றும் வகையில், இளம் (18 முதல் 26 வயது வரை) கர்னாடக இசைப் பாடகர்களுக்கு ‘தி இந்து’ மற்றும் ‘சரிகம’ இணைந்து கடந்த 5 ஆண்டுகளாக ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 6-வது ஆண்டுக்கான ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது - 2017’ இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை, நல்லி சின்னசாமி செட்டி, கோபுரம் மஞ்சள் தூள், குங்குமம் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.

15 நிமிடங்களுக்கு மிகாமல்

இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் குரல் பதிவை, வரும் அக்டோபர் 20-ம் தேதிக்குள், “எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது 2017, சரிகம, காசி ஆர்கேட், 3-வது மாடி, கதவு எண். 116, தியாகராயர் சாலை, தியாகராய நகர், சென்னை- 600 017” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த குரல் பதிவு 15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 9884009020 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம். இந்த விருதுக்கான போட்டி விதிமுறைகள் குறித்து www.thehindu.com/mss2017 என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விருது பெறும் கலைஞருக்கு, சரிகம தயாரிக்கும் இசை ஆல்பத்தில் பாட வாய்ப்பளிக்கப்படும். இந்த விருது, இளம் பாடல் கலைஞர்களுக்கு, தங்கள் கர்னாடக இசைப் பாடல் திறமையை வெளிப்படுத்த ஒரு நல்ல களமாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x