“அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள்” - ராகுலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

“அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள்” - ராகுலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
Updated on
1 min read

“அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள்” என ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெருபான்மையுடன் வெற்றிப்பெற்றதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள் ராகுல். காந்தியைப்போல நீங்கள் உங்கள் வழியில் பயணித்து மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள்.

அவரைப்போலவே மென்மையான வழியில் அன்பு, பணிவுடன் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள். உங்களின் நம்பகத்தன்மை வாய்ந்த அணுகுமுறையால் மக்களால் புதிய காற்றை சுவாசிக்க முடிந்துள்ளது. பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்துள்ளனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in